பதவி விலகினார் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ; பரபரப்பு உலக அரசியல்.!
பதவி விலகினார் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ; பரபரப்பு உலக அரசியல்.!
இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கேட்டு, பயங்கரவாத செயலில் ஈடுபட்டு, கனடாவுக்கு தப்பிச் சென்ற நபர்கள், அங்கிருந்தபடி இந்தியாவுக்கு எதிரான குரலை பதிவு செய்து வருகின்றனர். கனடாவில் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட, அதற்கு இந்தியாவே காரணம் என அந்நாட்டின் அதிபர் ட்ரூடோ குற்றசாட்டு முன்வைத்தார்.
கனடா அரசிடம் இந்தியாவுக்கு எதிரான எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இந்திய அரசின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டு காரணமாக இந்தியா - கனடா உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனடாவுக்கு சென்று அதிகாரத்தை கைப்பற்றிய சில காலிஸ்தான் ஆதரவாளர்கள், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: #Breaking: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; காலையிலேயே துயரம்.. நடுநடுங்கிப்போன மக்கள்.!
பதவி விலகுவதாக அறிவிப்பு
இதனால், அந்நாட்டின் அதிபர் மற்றும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக உள்நாட்டிலேயே மக்களின் அதிருப்தி நிலவ தொடங்கியது. உட்கட்சியிலும் இதுதொடர்பான எதிர்ப்பு கோஷங்கள் ஆளும் லிபரல் கட்சியினர் மற்றும் மக்கள் இடையே எழுந்த அதிருப்தி காரணமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை, அப்பொறுப்பில் தான் தொடருவதாகவும் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உலகளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காதலியை இம்ப்ரஸ் செய்ய முயற்சி; சிங்கங்களுக்கு இரையான ஊழியர்.. இறுதிநிமிட வீடியோ.!