ஆயுதப்படையில் பெண் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம்.. பகீர் தகவலால் பேரதிர்ச்சி.!
ஆயுதப்படையில் பெண் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம்.. பகீர் தகவலால் பேரதிர்ச்சி.!
நவ. 25 ஆம் தேதியான நேற்று முதல் 16 நாட்கள் ஐ.நா சபையின் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நவ. 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் சிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இராணுவ பணியில் உள்ள பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் தொல்லை தரப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இலண்டனை சார்ந்த பத்திரிகையாளர் லாரா வைட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை செய்தி சேகரிப்பில், இராணுவ பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த பதைபதைப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே உலகம் முழுவதும் திரைத்துறையை சார்ந்த பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான பிரச்சனைகளை மீ டூ என்ற ஹாஷ்டேக் மூலமாக பதிவு செய்து வந்த நிலையில், அதனைத்தொடர்ந்து திரைத்துறை மட்டுமல்லாது பள்ளி, பணியிடம் என பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்கள் அனைத்தும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
Armed Forces என்று அழைக்கப்படும் ஆயுதப்படையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. இதுகுறித்து புகார்கள் வரவில்லை. வந்தாலும் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவ்வாறு வந்த பெரும்பாலான குற்றசாட்டுகள் அதிர்ச்சியுறும் வகையில் இருந்தது. சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற நிகழ்வில் இந்த உருக்க தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், சில பெண் ஆயுதப்படை பணியாளர்கள் காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க சென்றால், அவர்கள் வன்மத்துடன் தகாத வார்த்தைகளால் விபரிக்கப்ட்ட கொடுமைகளையும் கண்ணீருடன் பல பெண்கள் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தி டைம்ஸ் பத்திரிகையில் தற்போது செய்தியாக வெளியாகியுள்ளது.