கண்கலங்கவைக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! உலகளவில் இதுவரை மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 983- ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 983- ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் கொரோனாவால் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது.
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் சில முக்கியமான தடுப்பூசிகள் மூன்றாம்கட்ட பரிசோதனையில் இருக்கும்நிலையில் அடுத்த ஆண்டுமுதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் இதுவரை 5 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 68 ஆயிரத்து 905- ஆக உள்ளது.