அடஅட.. சிரிக்கும் சூரியன்.! கிரகணத்திற்கு பிறகு நாசா வெளியிட்ட அபூர்வ புகைப்படம்!!
அடஅட.. சிரிக்கும் சூரியன்.! கிரகணத்திற்கு பிறகு நாசா வெளியிட்ட அபூர்வ புகைப்படம்!!
கிரகணத்திற்கு பிறகு சூரியன் சிரிப்பது போன்ற அபூர்வ புகைப்படத்தை நாசா வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.
சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, வளிமண்டலத்தில் சூரியன் சிரிப்பது போன்ற தோற்றத்துடன் காணப்பட்டுள்ளது. நாசா அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதாவது சூரியனின் மேற்பரப்பில் கரோனல் துளைகள் தற்செயலாக உருவாகி, நமக்கு சூரியன் சிரிப்பது போல தோன்றியுள்ளது.
அதில் இரு கரோனல் துளைகள் கண்களை போலவும், மூன்றாவது துளை அதன் கீழே நடுவில் புன்னகைப்பது போலவும் காட்சி அளிக்கிறது. புற ஊதா ஒளியின்படி பார்த்தால், சூரியனில் உள்ள அந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் எனப்படுகிறது. அவை வேகமான சூரியக் காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதி என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது..