அமெரிக்காவால் திடீர் பரபரப்பு..! அதிபர் டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் வந்ததால் கடும் அதிர்ச்சி.!
Letter containing poison addressed to Trump at White House
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ரைசின் என்ற விஷப் பொருள் தடவிய கடிதம் ஒன்று வந்ததால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு வந்த கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த கடிதத்தில் ரைசின் என்ற விஷப் பொருள் தடவப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து நடந்த விசாரணையில், அந்த கடிதம் கனடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் கடிதத்தை அனுப்பியது யார்? அந்தக் கடிதம் அதிபர் ட்ரம்பை குறிவைத்து அனுப்பட்டதா? என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்பிற்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவிற்கு விஷய பொருள் அடங்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதும், இதேபோல் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடிதத்தை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.