நடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன்! பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்.
Man arrested over killing of Instagram influencer Ekaterina Karaglanova
சமூக வலைத்தளங்களின் அபார வளர்ச்சி பலரை இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் இவற்றில் தங்களது திறமைகளையும், அழகையும் காட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பின்தொடர வைக்கின்றனர். அந்த வகையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த மாடலிங் நடிகை எக்டரினா கரெக்டொலவா (Ekaterina Karaglanova) என்ற 27 வயது நடிகை இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரம் ரசிகர்களை வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களை போடுவது, குறிப்பிட்ட நிறுவனங்களை புகழ்ந்துபேசுவது என கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த நடிகை கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் மாஸ்கோவில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலின் CCTV காட்சிகளை பார்வையிட்டபோது எக்டரினா கரெக்டொலவாவின் பழைய காதலர் சூட்கேசுடன் அவரது அறைக்குள் போனது பதிவாகியிருந்தது.
இதனை அடுத்து எக்டரினா கரெக்டொலவாவின் பழைய காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். எக்டரினா கரெக்டொலவா கொலை செய்யப்பட்ட நாளில் தனது புது காதலருடன் பிறந்தநாள் கொண்டாட இருந்தாராம்