ரயிலில் ஜோக்கர் போல உடையணிந்து இளைஞர் செய்த பயங்கரம்! அலறியடித்து ஓடிய பயணிகள்!! அதிர்ச்சி வீடியோ!!
ரயிலில் ஜோக்கர் போல உடையணிந்து இளைஞர் செய்த பயங்கரம்! அலறியடித்து ஓடிய பயணிகள்!! அதிர்ச்சி வீடியோ!!
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கியா ரயில்நிலையத்தில் இருந்து ஷின்ஜூகு வரை பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு நேற்று மாலை அப்பகுதியின் வழியே சென்ற மெட்ரோ ரயில் ஒன்றில் பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரம் போல உடையணிந்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.
ஜப்பான் முழுவதும் நேற்று ஹாலோவீன் கொண்டாட்டம் இருந்ததால், அவர் அவ்வாறு வந்திருக்கலாம் என எண்ணிகொண்டு அனைவரும் இருந்துள்ளனர். ஆனால் திடீரென அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அங்கிருந்த சக பயணிகளை சரமாரியாக தாக்கத் துவங்கியுள்ளார்.
இதில் 17 பேர் கத்திகுத்தி காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பயணிகள் ரயிலின் உள்ளே அங்குமிங்கும் ஓடத்தொடங்கியுள்ளனர். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் 24 வயது மதிப்புமிக்க அந்த நபரை மடக்கி பிடித்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர், தனக்கு மரணத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய செயலில் ஈடுபட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.