தொலைபேசி நிறுவனத்தை 24,000 முறை அழைத்த நபர்! கடுப்பாகி அந்நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Man called customer care center continuously
ஜப்பானை சேர்ந்த ஒகாடாமோ என்னும் 71 வயது முதியவர் ஒருவர் வெறும் எட்டு நாட்களில் மட்டும் கேடிடிஐ என்னும் தொலைபேசி நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை ஆயிரம் முறைக்கு மேல் தொடர்பு கொண்டதாக அந்த நிறுவனம் புகாரளித்துள்ளது.
மேலும், இதுகுறித்து கூறியுள்ள அந்த நிறுவனம் குறிப்பிட்ட அந்த முதியவர் கடந்த 2 வருடங்களாக தங்கள் நிறுவனத்திற்கு அடிக்கடி கால் செய்வதாகவும், இதுவரை சுமார் 24,000 தடவைக்கு மேல் அவர் கால் செய்துள்ளதாகவும், வாடிக்கையாளர் சேவையின் ஊழியரை தவறாக பேசுவார் அல்லது நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவார் என தெரிவித்துள்ளது.
முதலில் இதை நாங்கள் சாதாரணமாக விட்டுவிட்டதாகவும், தற்போது அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டதால் ஒரு வர்த்தகத்தை இயல்பாக இயங்கவிடாமல் தடுத்ததாக அவர் மீது குற்றம் பதியப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த முதியவர் கூறுகையில் தான் அந்நிறுவனத்திடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவன் என்றும் தெரிவித்துள்ளார்.