போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் கைதானதால் மெக்சிகோவில் பதற்றம்; விமானங்கள் மீது துப்பாக்கிசூடு.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் கைதானதால் மெக்சிகோவில் பதற்றம்; விமானங்கள் மீது துப்பாக்கிசூடு.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆயுதம் ஏந்தி தங்களின் உலகளாவிய போதைப்பொருள் சந்தை விற்பனையை கவனித்து வருகிறது. இதனால் அவர்களுக்கும், அரசு படையினருக்கும் இடையே பல மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் மன்னன் Chapo Guzman மகன் Ovidio Guzmán மெக்சிகோ நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் அந்நாட்டில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் பொது இடங்களில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால், மக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாக்க இருக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்குள்ள சினாலொவில் இருக்கும் சர்வதேச விமான நிலையமான சுழியாகான் (Culiacan International Airport, Sinaloa) விமான நிலையத்தில் துப்பாக்கிசூடு நடைபெற்றது.
அப்போது, சர்வதேச விமானம் ஒன்று தரையிறங்கிக்கொண்டு இருந்த நிலையில், விமானத்தின் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டது. பதறிப்போன மக்கள் தங்களின் உயிரை பாதுகாக்க விமானத்திற்குள் இருந்தவாறு இருக்கையில் இருந்து எழுந்து கீழே அமர்ந்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகியுள்ளது.