என்னடா இப்படி கிளம்பிட்டீங்க.... முதலையை மணந்த மெக்சிகோ நகர மேயர்... முத்தமிட்டு மணமகளை வாழ்த்திய காட்சி.!
என்னடா இப்படி கிளம்பிட்டீங்க.... முதலையை மணந்த மெக்சிகோ நகர மேயர்... முத்தமிட்டு மணமகளை வாழ்த்திய காட்சி.!
மெக்சிகோ நாட்டில் மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து கொண்டு அதற்கு முத்தமிட்ட சம்பவம் உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மெக்சிகோ நாட்டில் உள்ள சான் பெத்ரோ ஹுவாமெலுலா நகரம் அங்குள்ள பழமையான நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தில் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா.
அந்த நகர பழங்குடியின மக்களிடையே பழமையான பல பழக்கவழக்கங்கள் இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயற்கை வளத்தையும் மழை வளத்தையும் பாதுகாக்க அப்பகுதி மேயர் இளம் முதலை ஒன்றை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த வழக்கத்தின்படி மேயர் ஹியூகோ சாசா அங்குள்ள ஏழு வயது முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் முதலைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணம் முடிந்தவுடன் மேயர் அந்த முதலைக்கு முத்தம் ஒன்றும் கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.