குழந்தைகள் அழுவதை தடுக்க செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே கவனமா இருங்க.!
குழந்தைகள் அழுவதை தடுக்க செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே கவனமா இருங்க.!
தற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் மனிதனின் வாழ்க்கையின் ஒரு பங்காக மாறிவிட்ட நிலையில், பலரின் வருமானத்திற்கான வழியாகவும் மாறிவிட்டது. ஒவ்வொரு தனிநபரும் தனது செல்போனை பொழுதுபோக்கிற்காக, வேலைக்காக, படிப்புக்காக என பயன்படுத்தி வருகின்றனர்.
குழந்தைகளையும் விட்டுவைக்காத செல்போன்
உறங்கும் போதும் அதனை பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்குகின்றனர். இளம் தலைமுறை தாண்டி தற்போது ஸ்மார்ட் போன்கள் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள மூளையை பெருமளவு பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சரிவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; 7 குழந்தைகள் பலி, 30 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!
யூடியூப் வீடியோ பார்ப்பது, ரீல்ஸ் எடுப்பது, கேம் விளையாடுவது என இன்றளவில் நேரத்தை செலவிடும் பலரும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் வேறு வழியின்றி அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் போன்களால் ஏற்படும் பிரச்சனைகள்
மொபைல் திரைகளை அதிக நேரம் அழுத்தம் கொடுத்து பார்ப்பது பிற்காலத்தில் கண் சார்ந்த பிரச்சினைகளை அதிகரிக்க வழிவகை செய்யும். அதேபோல முதுகெலும்புகள் பாதிப்புக்குள்ளாகும். சோம்பல், மனச்சோர்வு, உடற்பருமன் சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாகும்.
இதனால் செல்போன் பயன்படுத்துதல் தொடர்பான விஷயத்தில் தங்களது குழந்தைகளிடம் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் அடம்பிடித்து அழுகின்றன என அந்நேரத்திற்கு சமாதானப்படுத்த கொடுப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கும் என உணர வேண்டும்.
இதையும் படிங்க: அம்பானி மருமகளுக்கு மாமியார் கொடுத்த வாய்பிளக்கவைக்கும் கிஃப்ட்.! போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்.!