2 வயது குழந்தையால் துடிதுடித்து உயிரிழந்த தாய்.! கண்ணிமைக்கும் நொடியிலேயே நேர்ந்த விபரீதம்!!
mother died by 2 year baby in car
உக்ரைன் ஸ்டாரோ செலோ கிராமத்தைச் சேர்ந்தவர் அர்துர். இவரது மனைவி யுலியா சார்கோ.இவர்களுக்கு மார்கரிட்டா என்ற 4 வயது குழந்தையும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சார்கோ கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 21 வது பிறந்தநாளை நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து காரில் பயணம் செய்த அவர், பின்னர் காருக்கு வெளியே இருந்தபடி கார்கதவின் ஜன்னல் பாதி மூடி இருந்த நிலையில், உள்ளே தலையை விட்டு இருக்யைில் அமர்ந்து இருந்த தனது 2 வயது குழந்தையை தூக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது குழந்தை விளையாட்டாக கார்சன்னலை மூடும் பட்டனை அழுத்தியுள்ளது.
அப்பொழுது ஜன்னல் கண்ணாடி மேலேறி சார்கோவின் கழுத்தை பயங்கரமாக இறுக்கியுள்ளது. இதனால் அவரது மூளைக்கு செல்லும் நரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் மயக்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சார்கோவின் கணவர், கார் கண்ணாடியை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த சார்கோவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு பிறகு சார்கோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.