கண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் கழுத்தை துளைத்து பாய்ந்த மீன்! மருத்துவரையே நடுநடுங்க வைத்த சம்பவம்!
Needlefish attack child while taking fish catching
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மீன்பிடித்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருந்து வருகிறது. மேலும் அதில் பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன்பிடிக்க சென்றபோது பெரும் விபரீதத்தில் சிக்கியுள்ளார்.
இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல். 16 வயது நிறைந்த அவர் தனது குடும்பத்தினருடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஊசி மீன் வகையைச் சேர்ந்த பெரிய மீன் ஒன்று இளைஞரின் கழுத்தில் பாய்ந்தது. அந்த வகை மீனின் வாய் ஊசி போல மிகவும் கூர்மையாக காணப்படும். மேலும் அது மட்டுமின்றி அந்த மீன் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தண்ணீரில் பாயக்கூடியது.
அந்த இளைஞனின் கழுத்தில் கழுத்தில் பாய்ந்ததில் அதன் வாய் ஒரு பக்கம் குத்தி மறுபக்கம் வெளியே வந்தது. இதைக் கண்டு பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர். ஆனாலும் முகமதுவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.