கொரோனா வைரஸ்க்கு புதிய பெயர்! இனி இப்படித்தான் அழைக்கவேண்டும்! உலக சுகாதார நிறுவனம் புதிய அறிவிப்பு!
new name for coronovirus
சீனாவில் வுஹான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 25 மேற்பட்ட நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் 1100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உலகளவில் 42000 க்கும் அதிகமான பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல நாட்டினரும், சொந்த தாயகத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு தற்போது 'கோவிட் 19' (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் கூறுகையில், உலகம் முழுவதும் இதை சிலர் தவறான பெயர்களால் அழைத்து வருகின்றனர். இதனால் பொதுப்பெயர் வைக்க முடிவு செய்தே இப்பெயர் வைத்துள்ளோம். மேலும் இந்த பெயர் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்திற்கோ , தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. மேலும் இது யாரையும் கஷ்டப்படுத்தும் விதத்தில் இருக்காது என கூறியுள்ளார்.
மேலும் covid (கோவிட்) என்பதில் co என்பது கொரோனா (corona) என்பதையும் vi என்பது வைரஸ் (virus ) மற்றும் d என்பது டிசீஸ் (disease) நோய் என்பதை குறிக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும் 2019ல் உள்ள 19ஐ இணைத்து கோவிட் -19 (COVID-19) என வைக்கப்பட்டுள்ளது. இனி உலகம் முழுவதும் இந்த ஒரே பெயரால் அழைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.