உலகிலேயே முதல் புத்தாண்டு பிறந்தது!. உற்சாக கொண்டாட்டத்தில் மக்கள்!.
new year started
உலகிலேயே முதல் புத்தாண்டு நியூசிலாந்தில் தொடங்கியது. அந்த நாட்டில் மக்கள் கோலாகலமாக, வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். 2018ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் 2019ம் ஆண்டு தொடங்குகிறது.
இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் நகர்ப்புறங்களில் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் எல்லோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். .
இந்நிலையில் உலகிலேயே முதல் புத்தாண்டு நியூசிலாந்தில் கோலாகலாம்க தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
மக்கள் அனைவரும் உற்சாகமாக ஆரவாரத்துடன் குரலெழுப்பி 2019ஐ வரவேற்றனர். இதேபோல் நியூசிலாந்தின் பல நகரங்களிலும் மக்கள் கூடி புத்தாண்டவை வரவேற்றனர். அதேபோல் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ரஷ்யாவிலும், மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.