அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. சீக்கியர்களை குறித்துவைத்து சரமாரி தாக்குதல்..!
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்.. சீக்கியர்களை குறித்து சரமாரி தாக்குதல்..!
சீக்கியர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில், இந்திய துணை தூதரகம் ஒருவரை கைது செய்துள்ளது.
நியூயார்க் நகரின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட இரண்டு சீக்கியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை கம்பால் தாக்கிய மர்ம நபர்கள், தலையில் கட்டப்பட்டிருந்த டர்பனை கழட்டி வீசிய நிலையில், அருகிலிருந்தவர்கள் பிடிக்க முயன்றதால் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் இந்திய தூதரகத்திற்கு தெரியவர கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சீக்கியர்கள் மீதான தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு நியூயார்க் நகரின் அட்டர்னி ஜெனரலான வெட்டிசியா ஜேம்ஸ் மிகுந்த கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரின் அதே பகுதியில் 72 வயதான சீக்கியர் நிர்மல்சிங் என்பவர் தாக்கப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது இரண்டு சீக்கியர்களை மர்ம நபர்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஏற்கனவே நிறவெறி தாக்குதல் நடந்து கடும் சர்ச்சையை சந்தித்த நிலையில், இந்த சம்பவமும் நடந்துள்ளது.