இரட்டை குழந்தைகள் என ஆசையோடு இருந்த கர்ப்பிணிக்கு பிரசவத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி!
No heart or brain still growing baby
அமரிக்காவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சோதனைக்காக மருத்துவர்களை அணுகியுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரையின்படி அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போவதை நினைத்து அந்த கர்ப்பிணி மகிழ்ச்சியில் இருந்தபோது சில மாதங்கள் கழித்து அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மீண்டும் வயிற்றை ஸ்கேன் செய்தபோது ஒருகுழந்தை மட்டுமே அணைத்து உறுப்புகளுடனும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் மற்றொரு குழந்தைக்கு கை, கால்கள் இருந்த நிலையில் இதயம், மூளை என எதுவும் இல்லாமல் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
பொதுவாக இதுபோன்று சரியான வளர்ச்சி இல்லாத குழந்தை மற்றொரு குழந்தையையும், தாயையும் பாதிக்கும். ஆனால், இந்த உயிர் அற்ற குழந்தையால் மற்றொரு குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ எந்த பாதிப்பும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் சமீபாத்தில் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. ஒரு குழந்தை நலமுடமும் இருந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிர் அற்ற கருவாக இருந்த நிலையில் அதனை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கியுள்னனர்.