50 ஆண்டுகளில் நீரில் மூழ்கும் தீவு; 12 ஆயிரம் மக்களின் நிலை என்ன?.. அதிர்ச்சியை தந்த ஆய்வாளர்களின் அறிவிப்பு.!
50 ஆண்டுகளில் நீரில் மூழ்கும் தீவு; 12 ஆயிரம் மக்களின் நிலை என்ன?.. அதிர்ச்சியை தந்த ஆய்வாளர்களின் அறிவிப்பு.!
மாறிவரும் பருவநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உலககெங்கும் உள்ள பல்வேறு நாடுகள் அவை சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கிவிட்டன. இதனால் பல நாடுகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் தீவு துவாலு உள்ளது. பிஜி தீவில் இருந்து வடக்கு திசையில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவு உள்ளது.
மொத்தமாக 25 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட தீவில், 11 ஆயிரத்து 900 மக்கள் வசித்து வருகிறார்கள். ஆண்டொன்றுக்கு 3500 சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாறுபாடு மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் துவாலு தீவு கடலில் மூழ்கி மாயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.
ஆனால், அத்தீவு பகுதிகளை கடல் ஆட்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கையை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. இதனால் 2100 வரையில் கடல்நீர்மட்டம் உயர்ந்தாலும் தீவு பாதிக்கப்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இடையில் சுனாமி ஏற்பட்டால் நிலை மாறலாம்.