இந்தியாவுடன் போருக்கும் தயாராக இருக்கிறோம் - பாகிஸ்தான் இராணுவ தளபதி பரபரப்பு பேச்சு..!
இந்தியாவுடன் போருக்கும் தயாராக இருக்கிறோம் - பாகிஸ்தான் இராணுவ தளபதி பரபரப்பு பேச்சு..!
இந்திய தலைமையின் கருத்துக்கள் பொறுப்பற்று உள்ளது. போர் திணிக்கப்பட்டால் நாங்கள் அதற்கு தயார் என பாகிஸ்தான் இராணுவ தளபதி பேசினார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கானின் பதவி அகற்றப்பட்டு, ஷநபாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமரானார். அவர் பதவியேற்றத்தை தொடர்ந்து பல மாற்றங்கள் அங்கு நடந்தது. பாகிஸ்தான் நாட்டின் புதிய இராணுவ தளபதியாக ஆஸிம் முந்நீர் பொறுப்பேற்றதை தொடர்ந்து, நேற்று முதல் முறையாக அவர் இந்திய - பாகிஸ்தான் எல்லையை பார்வையிட்டார்.
அங்குள்ள ரக்ஷிகரி பகுதியின் இந்திய - பாகிஸ்தான் எல்லை வீரர்களுடன் உரையாடுகையில், "கில்கித் பாகிஸ்தான் & ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய தலைமையிடம் இருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருவது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களின் மீது போர் திணிக்கப்படும் பட்சத்தில், தாய்நாட்டின் ஒவ்வொரு இன்ச்சையும் பாதுகாக்க, எதிரிகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் இராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்ற செய்தியை உறுதியாக கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது எல்லைப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.