பாக்., கிரிக்கெட் அணி தோல்வியடைந்த ஆவேசம்.. டிவியை உடைந்து ஆதங்கப்பட்ட ரசிகர்கள்?
பாக்., கிரிக்கெட் அணி தோல்வியடைந்த ஆவேசம்.. டிவியை உடைந்து ஆதங்கப்பட்ட ரசிகர்கள்?

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 உலகக்கோப்பை போட்டியில், நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் சேகரிக்க, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி, 42 வது ஓவரில் 244 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்; காவலர் அதிர்ச்சி செயல்.. பகீர் வீடியோ வைரல்.!
இந்திய அணியின் வெற்றி துபாய் மைதானத்தில் வாணவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய தேசமும் மகிழ்ச்சியுடன் இந்திய அணியின் வெற்றியை சிறப்பித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், பாகிஸ்தான் தோல்வியடைந்த ஆத்திரத்தில் தொலைக்காட்சியை நடுரோட்டுக்கு கொண்டு வந்து உடைத்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறையினரும், பாகிஸ்தான் அணியை மறைமுகமாக கலாய்க்கும் வகையில், "பக்கத்து நாட்டில் டிவி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது" என தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
வைரலாகி வரும் விடீயோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோமாளி, சர்வாதிகாரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் பரபரப்பு பேச்சு.!