#BigNews: பெண்களிடம் ஆபாசமாக பேச்சு.. பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் Leak Audio வைரல்...!
#BigNews: 2 பெண்களிடம் ஆபாசமாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.. Leak Audio வைரல்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
முன்னாள் கிரிக்கெட் வீரர் & பிரதமராக இருந்த இம்ரான் கான் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தெரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இம்ரான் கான் 2 பெண்களிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பெண்மணி ஒருவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆடியோவில் பெண்மணி தனது பிறப்புறுப்பில் கடுமையான வலி இருப்பதால், தன்னால் இன்று வர இயலாது என்று கூறுகிறார். அதனைக்கேட்ட இம்ரான் கான், "இன்றுதான் எனது குடும்பத்தார் இல்லை. நாளை அவர்கள் வந்துவிடுவார்கள். இன்று உன்னால் வர இயலாதா?" என்று கேள்வி எழுப்புகிறார். இதேபோல, பல ஆபாச பேச்சுகளும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் பாகிஸ்தானை காப்பாற்றுவேன் என தனது பிரச்சாரத்தை நடத்தி வரும் நிலையில், அவர் தொடர்பான ஆபாச ஆடியோ வெளியானது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் 2 பெண்களிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த குற்றசாட்டுகளை அவரின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், கட்சியின் தலைமை வரை தகவல் சென்றுள்ளது.