#BigNews : பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான்.. நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர்..!
#BigNews : பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான்.. நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர்..!
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கானின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அவரது கட்சியில் இருந்தவர்களே எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்நாட்டில் அரசியல் பிரச்சனை உருவானது. மேலும், இம்ரானின் ஆட்சிக்கு ஆதரவளித்த இயக்கம் தனது ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டது.
இதனால் நாடாளுமன்ற மெஜாரிட்டிக்கு தேவையான உறுப்பினர்களை இழந்த இம்ரான் கானின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இன்று நாடாளுமன்றம் கூடி மெஜாரிட்டி நிரூபித்தாக வேண்டும் என்ற நிலையில், அதன்போது இம்ரான் கான் தோல்வியை சந்தித்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில், பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் 3 வமாதத்திற்குள் தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது.