எங்களின் அரசு தோல்வியடைந்துவிட்டது - அரசின் தோல்வியை போட்டுடைத்த இம்ரான் கான்.!
எங்களின் அரசு தோல்வியடைந்துவிட்டது - அரசின் தோல்வியை போட்டுடைத்த இம்ரான் கான்.!
கடந்த 2018 ஆம் வருடம் முதல் பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இம்ரான் கான் ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதார சிக்கல் என்று பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 4 வருடமாக இம்ரான் கான் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், நாங்கள் அளித்த வாக்குறுதிப்படி பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர இயலவில்லை.
அதற்கான எங்களது அரசின் முடிவுகள் தோல்வியை அடைந்துள்ளது என இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக இம்ரான் கான் தெரிவிக்கையில், "ஆட்சிக்கு வந்ததும் புரட்சிகர நடவடிக்கை மூலமாக மாற்றத்தை கொண்டு வர விரும்பினோம். ஆனால், நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாதது என்பதை உணர்ந்தோம்.
எனது அரசு மற்றும் அமைச்சகம் விரும்பிய முடிவுகளை மக்களுக்கு வழங்குவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. அரசுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே பெரும் பிரச்சனை" என்று தெரிவித்தார்.