அமெரிக்காவின் அடிமையா என்னால இருக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேச்சு..!
அமெரிக்காவின் அடிமையா என்னால இருக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு பேச்சு..!
ஷாபாஸ் ஷெரீப், பிளவால் பூட்டோ மற்றும் பஸ்லுர் ரஹ்மான் அமெரிக்காவின் அடிமைகள் என பாகிஸ்தான் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பதவியிழக்கும் அபாயத்தில் சிக்கி இருக்கிறார். இந்நிலையில், அவர் தொலைக்காட்சி மூலமாக மக்களிடையே உரையாற்றுகையில்,
"பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப், பிளவால் பூட்டோ மற்றும் பஸ்லுர் ரஹ்மான் போன்றோர் அமெரிக்க நாட்டின் அடிமைகள் ஆவார்கள். இந்த மூன்று கைக்கூலியும் கடந்த 30 வருடமாக நாட்டினை ஆட்சி செய்து இந்நிலைக்கு இன்று தள்ளியுள்ளார்.
இவர்கள் பாகிஸ்தான் நாட்டவரை அமெரிக்க அடிமையாக இருக்க சொல்கின்றனர். தன்னை பதவியில் இருந்து நீக்க வெளிநாட்டு சக்தி முயற்சித்து வருகிறது. மில்லியன் கணக்கான ஊழல் புரிந்த எதிர்க்கட்சிகள் என்னை பதவியில் இருந்து நீக்க துடிக்கிறது. எனக்கு ஆதவாக இளைஞர்கள் வீதிலில் வந்து போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இம்ரான் கானின் ஆட்சியின்போதுவரை அமெரிக்கா பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு பெரும் தொகையை அளித்து வந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகள் பயங்கரவாதத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்த தொகையை நிறுத்தியது. இதனை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.