இந்திய சினிமாவிற்கு பாகிஸ்தானில் தடை; அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!
pakistan suprem court judjement
இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு பாகிஸ்தானின் உள்ள உச்ச நீதிமன்றம் தடைவிதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே முரண்பாடுகள் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து இருநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு கூட தற்சமயம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் மீண்டும் தொடர விரும்புகிறது என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்.
அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இந்தியா திட்டத்தை பாகிஸ்தானிலும் தொடங்கினார். மேலும், 2016 ஆண்டு தடைவிதிக்கப்பட்டிருந்த இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீண்டும் 2017 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மீண்டும் இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சகிப் நிஸார், பாகிஸ்தானில் அணைகட்ட இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்பு தடைவிதித்து உத்தரவிடுவதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு இந்திய சினிமா துறையினர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரு
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசு இந்தியாவுடன் உறவை விரும்பும் நிலையில் இந்த தீர்ப்பானது சிக்கலை தான் ஏற்படுத்தியுள்ளது.