#Breaking: பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சேதமடைந்த வீடுகள்.. 9 பேர் பலி.! 100 பேர் படுகாயம்..!!
#Breaking: பாகிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம்.. சேதமடைந்த வீடுகள்.. 9 பேர் பலி.! 100 பேர் படுகாயம்..!!
பாகிஸ்தான் நாட்டிலுள்ள வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa province) மாகாணத்தில் இன்று அதிபயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை ஒட்டி இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் போது இந்தியாவின் வடமாநிலம் மற்றம் டெல்லி போன்ற பகுதிகளிலும் நிலநடுக்கதன்மை உணரப்பட்டுள்ளது. அங்குள்ள ஸ்வாத் வேலி பகுதியில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இதில் 9 பேர் சிக்கி பலியாகியுள்ள நிலையில், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், இந்தியா - பாகிஸ்தானை மையமாகவைத்து ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று முன்னதாகவே தெரிவித்திருந்த நிலையில், அவ்வப்போது இந்த பகுதிகளில் அதிபயங்கர நிலநடுக்கம் கடந்த சில மாதங்களாகவே உணரப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.