அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்குள் நுழைய நிரந்தரத் தடை,..ரஷ்ய அதிபர் புடின் பதிலடி..!
அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்குள் நுழைய நிரந்தரத் தடை,..ரஷ்ய அதிபர் புடின் பதிலடி..!
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் விளாடிமிர் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்களார் பார்க்கப்படுகிறது.
ரஷ்ய நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சி.என்.என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க முக்கியஸ்தர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சேர்க்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தபோது டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கடுமையாக இருந்ததில்லை என்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.