×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடு வானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்!,, மோதிய வேகத்தில் தீ பிடித்ததால் நாசம்: 3 பேர் பலி..!

நடு வானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்!,, மோதிய வேகத்தில் தீ பிடித்ததால் நாசம்: 3 பேர் பலி..!

Advertisement

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், வாட்சன்வில்லே நகரில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட 'செஸ்னா 152'  என்ற சிறிய ரக விமானம் வந்தது.

அதே நேரத்தில், அங்கு இரட்டை என்ஜின் கொண்ட 'செஸ்னா 340' என்ற சிறிய ரக விமானம் ஒன்றும் தரையிறங்குவதற்காக வந்தது. இந்த இரண்டு சிறிய ரக விமானங்களும் எதிர்எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தன. இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதின.

விமானங்கள் மோதிய வேகத்தில் அவை தீப்பிடித்து எரிந்துவாறு விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கின. 'செஸ்னா 152' விமானத்தில் ஒரு விமானியும், 'செஸ்னா 340' விமானத்தில் விமானி உட்பட 2 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த எதிர்பாராத விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரும் உயிரிழந்துள்ளா. இதன் காரணமாக பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cessna 340 #Cessna 152 #United States of America #Aero planes Collided #3 Persons Dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story