கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி நர்ஸ்க்கு நேர்ந்துள்ள கொடுமை!
Pregnant nurse tested for corono virus
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி நர்ஸ் உட்பட இரண்டு நர்ஸ்களை கட்டாயப்படுத்தி தனியாக அடைத்துள்ளனர்.
கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களை தனியாக அடைத்து வைத்து கண்கானிக்கும் பணியினை அனைத்து நாட்டினரும் செய்து வருகின்றனர். இதற்கான முழு அதிகாரத்தையும் பிரிட்டன் அரசு அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பெண் தனியொரு அறையில் அடைக்கபட்டார். மேலும் அவருக்கு சிகிச்சையளித்த இரண்டு செவிலியர்களும் வேறொரு அறையில் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டு கண்கானிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு செவிலியர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.