இறுதி சடங்கில் குலுங்க குலுங்க சிரித்த உறவினர்கள்! இறந்தவரின் ஆசையை நிறைவேற்ற நடந்த வினோத வீடியோ காட்சி
relatives laughing at funeral
பொதுவாக குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அழுவது தான் வழக்கமான ஒன்று. ஆனால் அயர்லாந்தில் இறந்த ராணுவ அதிகாரியின் இறுதி சடங்கில் அவரது உறவினர்கள் குலுங்க குலுங்க சிரித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை கீழே பாப்போம்.
அயர்லாந்து நாட்டின் லீனஸ்டர் மாகாணத்திலுள்ள கில்கென்னி என்னும் நகரை சேர்ந்தவர் சே பிராட்லி. இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் கடந்த 12ம் தேதி காலமானார்.
இவர் இறப்பதற்கு முன்பு தனது கடைசி ஆசையை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆசையானது, "தனது உடலை அடக்கம் செய்யும் பொழுது உறவினர்கள் யாரும் அழக்கூடாது என்றும் மாறாக அனைவரும் வாய்விட்டு சிரிக்க வேண்டும்" என பிராட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இறுதிச் சடங்கின்போது தனது உறவினர்களை சிரிக்க வைப்பதற்காக தான் பேசிய ஆடியோ ஒன்றை தனது மகன் ஆண்ட்ரியாவிடம் கொடுத்துள்ளார். அந்த ஆடியோவில், "நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது; என்னை வெளியே விடுங்கள்" என பிராட்லி பேசியிருந்தார்.
அதன்படி அவரது ஆசையை நிறைவேற்ற இறுதிச் சடங்கின்போது கூடியிருந்த உறவினர்கள் அவரது ஆடியோவை ஒளிபரப்ப செய்து கூடிநின்று குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.