ஒரு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண் அதிகாரியின் செயல்.!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்னும் பகுதி அருகேயுள்ள ரகசிய அணுஆயுத தளத்தில் அமைந்துள்ள நீர்மூழ
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ என்னும் பகுதி அருகேயுள்ள ரகசிய அணுஆயுத தளத்தில் அமைந்துள்ள நீர்மூழ்கி கப்பலுக்குள் தனது காதலனுடன் சேர்ந்து கிளாரி ஜென்கின்ஸ் என்ற பெண் அதிகாரி ஒருவர் ஆபாசமான வீடியோக்களை படமெடுத்து அதனை only fans என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
காதலர்கள் இருவரும் ரகசிய தளத்தில் அடிக்கடி ஆபாச வீடியோக்களை எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டு செயல் பட்டு வந்துள்ளார். இச்சம்பவம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
ஒரு நாட்டின் ரகசியம் காக்கப்படக்கூடிய இடமான அணு ஆயுத கப்பல் தளத்தில் காதலுடன் பெண் கடற்படை அதிகாரி எப்படி போன் மற்றும் கேமராவை எடுத்து சென்று ஆபாச வீடியோ எடுத்தனர் என்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும் ஒரு கப்பலுக்குள் வரும் போது முழுவதும் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே வரமுடியும் என்ற நிலை இருக்கும் போது எப்படி இவர்கள் கேமரா மற்றும் செல்போனை எடுத்து வந்து வீடியோ எடுத்தனர் என்ற கேள்வியும் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
அதனை விட ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் ஒரு நாட்டின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் ஒரு பகுதியில் வைத்து இவர்கள் படம்பிடித்த ஆபாச வீடியோக்களைக் கொண்டு வெளிநாட்டு முகவர்கள் யாரேனும் அந்த ஜோடியை மிரட்டி நாட்டின் ரகசிய தகவல்களை வாங்க முற்படுவார்களோ என்பது தான்.
நாட்டின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தில் இப்படி ஒரு தவறான செயலை செய்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.