உக்ரைனில் போர் பதற்றம்.. படையெடுப்புக்கு தயாரான ரஷியா.. US, NATO படைகள் குவிப்பு..!
உக்ரைனில் போர் பதற்றம்.. படையெடுப்புக்கு தயாரான ரஷியா.. US, NATO படைகள் குவிப்பு..!
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் உக்ரைன் தனி நாடாக பிரிந்துவிட்ட நிலையில், ரஷியா உக்ரனை தன்னுடன் இணைக்க பலகட்ட முயற்சியை எடுத்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் பொருட்டு, ரஷியா - உக்ரைன் எல்லையில் தனது படைபலத்தை அதிகரித்து, எந்த நேரமும் உக்ரைனின் மீது போர் தொடுக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனை தனதாக்கும் ரஷியாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து நட்பு நாடுகள் ரஷியாவை எச்சரித்தும் பலனில்லை.
கடந்த வாரம் கூட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனை ரஷியா பிப். மாதத்திற்குள் கைப்பற்றலாம் அல்லது படையெடுக்கலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், உக்ரனை கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் படையெடுப்பை முறியடிக்க, ஐரோப்பிய யூனியனின் நேட்டோ படைகளுடன் அமெரிக்காவின் யூ.எஸ் படைகள் இணைந்து செயலாற்ற திட்டமிடப்பட்டு, அமெரிக்க வீரர்கள் 3,500 பேர் ஐரோப்பா விரைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகளில் 8,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
அமெரிக்காவின் 6 F-15s ரக போர் விமானங்களும், பெல்ஜியத்தின் F-16s ரக போர் விமானங்களும் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷியாவின் சார்பில் நாடு கைப்பற்றலுக்கு தயாராகி 1 இலட்சம் வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், வான்வழி, தரைவழி என அனைத்து நிலையிலும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும், சைபர் தாக்குதலுக்கும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
அவர்களை எதிர்க்கும் பொருட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் NATO படைகள் லூதியானா, போலந்து, எஸ்தோனியா, லாத்வியா, ஹங்கேரி, ரொமேனியா ஆகிய எல்லையிலும், உக்ரைன் - இங்கிலாந்து எல்லையில் உள்ள ரோமானியா, மோல்டோவியா பகுதிகளில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போர் மூள்வதற்கு முன்னதாக நேரடியாக உக்ரைனுக்கு செல்ல இயலாது என்பதால், எல்லை பகுதியில் முகாமிட்டுள்ளனர். ரஷியா தனது படையெடுப்பை நிகழ்த்தும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக NATO மற்றும் US கூட்டுப்படைகள் பதில் தாக்குதலில் ஈடுபடலாம்.
மேலும், ஒருவேளை ரஷியா உக்ரைனை கைப்பற்றிவிடும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து அப்படைகள் வராமல் இருப்பதை தடுக்கவும் எல்லைகள் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.