நல்ல செய்தி வந்துருக்கு.. ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? புதினின் திடீர் அறிவிப்பு..
நல்ல செய்தி வந்துருக்கு.. ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? புதினின் திடீர் அறிவிப்பு..
ரஷ்யா அதிபர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.
நேட்டோ அமைப்பில் தங்களை சேர்த்துக்கொள்ளும்படி உக்ரைன் நாடு கேட்டதை அடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சண்டை முற்றி தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 16வது நாளை எட்டியுள்ளது.
மேலும், உக்ரைனின் பல்வேறு இடங்களில் இன்று ரஷ்யா பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தநிலையில், உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.