உக்ரைன் மீது படையெடுத்தால் பதிலடி.. 50 ஆயிரம் உயிரிழப்பு.. ரஷியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.!
உக்ரைன் மீது படையெடுத்தால் பதிலடி.. 50 ஆயிரம் உயிரிழப்பு.. ரஷியாவை எச்சரிக்கும் அமெரிக்கா.!
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரிந்து சென்ற உக்ரனை தன்னுடன் இணைக்கும் இறுதி செயலில் ரஷியா இறங்கியுள்ளது. இதனால் உக்ரைன் மீது படையெடுத்து செல்ல ரஷியா - உக்ரைன் எல்லையில் தனது படைவீரர்களை நிலைநிறுத்தியுள்ளது.
ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள், உக்ரைன் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லையில் NATO மற்றும் US படைகளை குவித்து வருகிறது. பிப்ரவரிக்குள் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷியாவின் இராணுவ தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "ரஷ்யா எந்த சமயத்திலும் உக்ரைனை ஆக்கிரமிக்கலாம். இதனால் அதிக மனித உயிரிழப்பு ஏற்படும்.
உக்ரைனை பாதுகாக்க எங்களின் தரப்பிலும் தயார் நிலையில் உள்ளதால், அது ரஷிய இராணுவத்திற்கு அதிக இழப்பை தரலாம் என நினைக்கிறோம். உக்ரைன் நாட்டின் தலைநகரான கெய்வை ரஷியா கைப்பற்ற முயலும் நேரத்தில், 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள்" என்று தெரிவித்தார்.