"இந்தியாவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்" - ரஷிய அதிபர் பாராட்டு.!
இந்தியாவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார் - ரஷிய அதிபர் பாராட்டு.!
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 8வது கிழக்கு பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் அவர் தனது பதில்களை தெரிவித்தார்.
இந்தியா குறித்து கேட்டபோது, "இந்தியாவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியானது. அதனை ஊக்குவிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை. அவர் சிறப்பாக செயல்படுகிறார்.
இந்தியாவை பார்த்து நாம் இவ்விஷயத்தில் கற்றுக்கொள்ளவேண்டியவை உள்ளன. ரஷியர்கள் ரஷிய தயாரிப்புகளான ஆட்டோமொபைல்களை பயன்படுத்த வேணும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கு பயனாக இருக்கும்" என பேசினார்.