விமானம் விழுந்து 38 பேர் பலியான விவகாரம்; அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய அதிபர்.!
விமானம் விழுந்து 38 பேர் பலியான விவகாரம்; அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய அதிபர்.!
கஜகஸ்தான் நாட்டில், கடந்த புதன்கிழமை அன்று, அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் 8432 விபத்தில் சிக்கியது. விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 38 பேர் பலியான நிலையில், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணையில், இந்த விமானம் அஜர்பைஜான் நாட்டில் இருந்து ரஷியா நோக்கி பயணம் செய்த நிலையில், உக்ரைன் - ரஷியா சண்டை நடந்து வரும் பகுதியை விமானம் நெருங்கி சென்றபோது, ரஷ்ய துருப்புகள் பயணிகள் விமானத்தை உக்ரைன் நாட்டின் உளவு டிரோன் என நினைத்து தாக்கியது.
இதையும் படிங்க: டயாபடிக் நோயாளிகளே.. பூனை வளர்க்கிறிர்களா.?! உயிரை எடுத்த வளர்ப்பு பூனை.. உஷார்.!
விபத்தில் சிக்கிய விமானம்
இந்த சம்பவத்தில் விமானத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக விமானம் கஜகஸ்தான் நாட்டில் உள்ள அகாடூ விமான நிலையத்தில் அவசர தரையிறக்கத்தின்போது விபத்தில் சிக்கியது. மொத்தமாக விமானத்தில் 66 பயணிகள் பயணம் செய்தனர்.
விமான விபத்தில் மக்கள் பலியானதற்கு ரஷியாவின் தாக்குதலே காரணம் என சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அஜர்பைஜான் நிறுவனமும் ரஷியாவுக்கு செல்ல வேண்டிய அனைத்து விமானங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
ரஷ்ய அதிபர் மன்னிப்பு கோரினார்
இந்நிலையில், ரஷியா அரசின் தலைமை அலுவலமாக கருதப்படும் கேர்லினின் தரவுகளில் இருந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அஜர்பைஜான் அதிபர் இஹம் அலியேவுக்கு தொடர்பு கொண்டு தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டு அதிபர்களும் விமான விபத்து தொடர்பாக விவாதித்ததாகவும், ரஷிய அதிபர் தனது இரங்கலை பதிவு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 11 வயது முதல் கடத்தி சீரழிக்கப்படும் சிறுமிகள்.. பாலியல் அடிமைகளாக பெண்கள்.. சூடானில் பகீர்.!