ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவலைக்கிடம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவலைக்கிடம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (70), அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் தவறி விழுந்து, அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை சம்மந்தமான வதந்திகள், கடந்த சில வருடங்களாக அடிக்கடி பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்றுநோய் உள்ளதாக முன்பு தகவல் பரவியது. இந்த தகவலை, ரஷ்ய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுத்தது.
இதையடுத்து, கடந்த மாதம் கரீபிய தீவு நாடான கியூபா அதிபர் மிகைல் டியாஸ் கனேலை, ரஷ்ய அதிபர் புடின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது புதினின் கைகள் நடுங்கியதாகவும், அவரது கைகள் ஊதா நிறத்தில் இருந்ததாகவும், பிரிட்டன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. மேலும், அவர் நடக்கும் போது அசவுகரியத்துடன் நடந்ததாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில் மாஸ்கோவில் இருக்கும் அதிபர் மாளிகை படிக்கட்டுகளில் இறங்கி வரும் போது, விளாடிமிர் புடின் தவறி விழுந்து விட்டதாகவும், அப்போது அவரையும் மீறி மலம் வெளியேறியதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் புற்றுநோய் காரணமாக, புடினின் வயிறு மற்றும் குடல், ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் தான் அவரையும் மீறி மலம் வெளியேறியது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உளவாளி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.