#ShockingNews: நகரசபை தலைவரின் 16 வயது மகனை கடத்தி சென்ற ரஷிய வீரர்கள்?.. பரபரப்பு குற்றச்சாட்டு.!
#ShockingNews: நகரசபை தலைவரின் 16 வயது மகனை கடத்தி சென்ற ரஷிய வீரர்கள்?.. பரபரப்பு குற்றச்சாட்டு.!
உக்ரைன் - ரஷியா போர் ஒன்றரை மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷியா உக்ரைனை சரணடையச்சொல்லி பல்முனை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேற்கு ஏகாதிபத்திய நாடுகளிடம் இருந்து பெரும் ஆயுதத்தை வைத்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் போக்கு ரஷியாவிற்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், போரை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் இயன்றளவு உக்ரைனை விரைந்து கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. இதனால் ரஷியாவின் தரப்பில் இன்னும் பேரழிவை தரும் தாக்குதல்கள் முழுவீச்சில் நடத்தப்படவில்லை.
இந்த போர் சூழலை கருத்தில் கொண்டு ரஷியாவின் மீது உக்ரைன் பல படுகொலைகள் தொடர்பான குற்றச்சாட்டையும் பதிவு செய்து வரும் நிலையில், அங்குள்ள சபோர்ஜ்ஜியா (Zaporizhzhia) நகர சபைத்தலைவர் ஓலே புரியாக்கின் 16 வயது மகனை ரஷ்ய துருப்புகள் கடத்திவிட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொலிடோபோலில் நகரில் இருந்து வெளியேற முயற்சிக்கையில் தனது மகனை ரஷிய துருப்புகள் கடத்திவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.