துண்டாக விழுந்த மார்பு காம்புகள்.. செண்டால் வினை.. 15 வயதில்., பதறவைக்கும் சம்பவம்.. வினையான விளையாட்டு.!
துண்டாக விழுந்த மார்பு காம்புகள்.. செண்டால் வினை.. 15 வயதில்., பதறவைக்கும் சம்பவம்.. வினையான விளையாட்டு.!
சிறுவர்களுக்கு இடையே நடந்த ஆர்வமிகுதி சம்பவத்தால், 15 வயது சிறுவனின் மார்பகத்தில் சென்ட்டை அளவுக்கு அதிகமாக அடித்ததில், காம்பு துண்டாகியுள்ளது. சிறுவர்களின் விளையாட்டு செயலால் நேர்ந்த பயங்கரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இலண்டன் நகரில் உள்ள லிவர்பூல் நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவரிடம், அவரின் சக நண்பர்கள் போட்டி வைத்துள்ளனர். போட்டியின் படி சென்ட்டை மார்பகத்தில் அடிக்க வேண்டும். சிறுவனும் விபரீதம் தெரியாமல் ஆர்வ மிகுதியில் போட்டிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆட்கள் இல்லாத நேரத்தில் உடைமாற்றும் அறைக்கு சென்ற சிறுவர்கள், போட்டியை ஏற்றுக்கொண்ட சிறுவனின் சட்டையை கழற்றி மார்பக காம்பு பகுதியில் சென்ட்டை ஸ்ப்ரே செய்துள்ளனர். முழு சென்ட்டையும் ஸ்ப்ரே செய்தவர்கள், மார்பக காம்பை திருகியபோது அது கீழே விழுந்துள்ளது. இதனால் சிறுவன் தனது இரண்டு மார்பக காம்பையும் இழந்துள்ளான்.
முதலில் ஒன்றும் தெரியாத நிலையில், பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் எரிய தொடங்கியுள்ளது. சிறுவன் இரத்தத்தை துடைத்துவிட்டு, தனது வகுப்பறைக்கு சென்ற நிலையில், வலியால் அவதிப்பட தொடங்கியுள்ளார். ஆசிரியர் சிறுவனை கவனித்து ஏதும் உடல்நலக்குறைவா? என்றும் கேட்டும் முதலில் சொல்லவில்லை.
பின்னர், இரத்தம் சிறிது சிறிதாக வெளியேறி இரத்தக்கறை தெரியவந்ததும், ஆசிரியர் விசாரித்த போது உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதனால் மார்பக காம்பை இழந்த சிறுவன் தனது வாழ்நாட்களை நகர்த்தி வருகிறார். மேலும், அவர் பொதுவெளிகளில் அல்லது கடற்கரைக்கு செல்லும் போது, மேலாடையை கழற்றாமல் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும், ஆர்வக்கோளாறில் சம்பவம் செய்துவிட்டு, அந்த போட்டியை அறியாத வயதில் ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய முட்டாள்தனம் எனவும் மாணவர் புலம்பி இருக்கிறார்.
Note: images are Respective