ஐயோ பாவம்! கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் வீடுகளை இழந்து தவிக்கும் ஏதென்ஸ் மக்கள்
ஐயோ பாவம்! கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் வீடுகளை இழந்து தவிக்கும் ஏதென்ஸ் மக்கள்
ஐரோப்பாக் கண்டத்தின் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸை ஒட்டியுள்ள பென்ட்லி என்ற மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
ஏதென்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பென்டலி என்ற மலைப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அதிக வெப்பத்தின் காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளது. இந்த காட்டுத் தீயானது தீவிரமடைந்து நகருக்குள் புகுந்ததை அடுத்து பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி விட்டன.
அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தீயினை கட்டுக்குள் கொண்டுவர கிரீஸ் நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் அவர்களுக்கு உறுதுணையாக ரோமை சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் களத்தில் அயராமல் உழைத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் 120 தீயணைப்பு வண்டிகளும் தீயினை அணைக்க போராடி வருகிறது.