×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமெரிக்காவும், தென் கொரியாவும் எங்களது இலக்கு: ஏவுகணை சோதனைக்கு பிறகு வட கொரியா அளித்த அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவும், தென் கொரியாவும் எங்களது இலக்கு: ஏவுகணை சோதனைக்கு பிறகு வட கொரியா அளித்த அதிர்ச்சி தகவல்..!

Advertisement

தென் கொரியா, அமெரிக்காவை குறி வைத்தே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று வட கொரியா அதிர்ச்சி தகவலை கூறி உள்ளது. 

கடந்த மாதம் அமெரிக்கா, தென்கொரிய படைகள் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதற்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா  ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. வடகொரியா கடந்த வாரம் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசியது. கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று தென் கொரிய கடலோரத்தில்  விழுந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து வட கொரிய ராணுவம் நேற்று கூறுகையில், தென் கொரியா, அமெரிக்கா, விமான தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிதான் இந்த ஏவுகணை சோதனை, இதில் அணு ஆயுதங்களும் அடங்கும். எதிரி நாடுகளின் இவ்வகையான ஆத்திரமூட்டும் எதிர்ப்பு ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால் கொரிய மக்கள் ராணுவம் (கேபிஏ) ஈவு இரக்கமின்றி அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

தென் கொரிய, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘ வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கிம் ஜோங்-உன் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Missile test #North Korea #South Korea #America #Kim Jong
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story