மின்கம்பத்தின் உச்சியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கரடி!! வைரல் வீடியோ..
கரடி ஒன்று மின்கம்பத்தில் ஏறி, அங்கிருந்த கம்பிகளில் சிக்கிக்கொண்ட வீடியோ காட்சி ஒன்
கரடி ஒன்று மின்கம்பத்தில் ஏறி, அங்கிருந்த கம்பிகளில் சிக்கிக்கொண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் புறநகர் பகுதியில் இருக்கும் மின்கம்பத்தில் ஒரு சிறிய கரடி ஏறியுள்ளது. மின்கம்பத்தில் ஏறிய கரடி அங்கிருந்த கம்பிகளுக்குள் சிக்கி, வெளிய வர முடியாமல் தவித்துள்ளது.
இதனை பார்த்த சிலர் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின்கம்பியில் சிக்கியிருந்த கரடியை வெளியே கொண்டுவந்தனர். பின்னர் அந்த கரடி மனிதர்களை போல் அந்த மின்கம்பத்தில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.