திடீரென தொழிற்சாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்! 6 பேர் பலி!
Someone gun shot in us
அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார் ஒரு ஊழியர்.
அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மால்சன் கூர் வளாகத்தில்
பீர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மேலும் அந்த வளாகத்தில் பல அலுவலகங்கள் உள்ளன.
பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில், சுமார் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்து, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த தொழிலாளர்களை குறிவைத்து சரமாரியாக சுட்டுள்ளான்.
திடீரென துப்பாக்கி குண்டுகள் வெடித்ததால், அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், பீர் தொழிற்சாலையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 51 வயது நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் அதே பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த ஊழியர் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆம்புலன்சுகளையும், தீயணைப்பு வாகனங்களையும் வரவழைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.