#Accident: ஒரு பேருந்தில் 110 பேர் பயணம்.. பள்ளத்தில் பாய்ந்ததால் 35 பேர் பரிதாப பலி., 71 பேர் படுகாயம்.!
#Accident: ஒரு பேருந்தில் 110 பேர் பயணம்.. பள்ளத்தில் பாய்ந்ததால் 35 பேர் பரிதாப பலி., 71 பேர் படுகாயம்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாவே நாட்டில், தென்கிழக்கில் அமைந்துள்ளது சீமானிமாணி கிராமம். இந்த கிராமத்திற்கு சொற்ப அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், கிடைக்கும் பேருந்தில் மக்கள் நூற்றுக்கணக்கில் பயணம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சம்பவத்தன்று பேருந்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்தனர். ஈஸ்டர் விடுமுறை கொண்டாட்டத்தால், அளவுக்கு அதிகமான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 35 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 71 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள சாலைகளின் பராமரிப்பின்மை காரணமாக விபத்துகள் நேர்வதாக ஐ.நா தகவல் தெரிவிக்கிறது.