இதனை நீங்கள் செய்தால் நிச்சயம் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்.! பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்.! வடகொரியா எச்சரிக்கை.!
இதனை நீங்கள் செய்தால் நிச்சயம் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்.! பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்.! வடகொரியா எச்சரிக்கை.!
ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நாடு ‘ஐ.சி.பி.எம்.’ என அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்கிற வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்க வல்லரசையும் அதிர வைத்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய சோதனையை இப்போதுதான் வடகொரியா நடத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில், தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி சூ ஊக் சென்றபோது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது என கூறினார்.
இதற்கு வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யூ ஜாங் கூறுகையில், தென் கொரியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், தங்களுடைய நாடு அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.