திடீர் சுனாமியால் கடும் அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்!. பதறவைக்கும் வீடியோ!.
திடீர் சுனாமியால் கடும் அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல் அலைகள்!. பதறவைக்கும் வீடியோ!.
நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 6 ரிக்டருக்கு அதிகமாக ஏற்பட்டாலே அது அபாயகரமானது.
இந்த நிலையில் இன்று இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் அந்த நாட்டு பேரிடர் முகம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சுலாவேசி என்ற தீவில் உள்ள பாலு என்ற இடத்தில் சுனாமி தாக்கியுள்ளது.
இதனையடுத்து சுனாமி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கடல் அலைகள் 6 அடி உயரத்துக்கு எழுந்து சாலையில் உள்ள பொருட்களை அடித்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காணொளி கட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-ம் அதிகமானோர் உயிரிழந்தனர். அதேபோல் 2004-ல் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.