5 கோள்கள்.. 2 விண்கற்கள்.. ஞாயிற்றுக்கிழமை காணத்தவறாதீர்கள் மக்களே..!
5 கோள்கள்.. 2 விண்கற்கள்.. ஞாயிற்றுக்கிழமை காணத்தவறாதீர்கள் மக்களே..!
வானில் பல விந்தைகள் நடப்பதும், பல அறிய முடியாத மர்மங்கள் சூழ்ந்து இருப்பதுமே அதன் பெருமையை தனித்துவமாக உணர்த்தி வருகிறது. வானியல் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது. அவ்வப்போது, கோள்கள் சந்திக்கும் காட்சியும், கோள்களை நாம் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தூரத்தில் அவைகள் இருப்பதால் குட்டி மின்விளக்கு போன்ற வெளிச்சத்தை இரவு நேரத்தில் காணலாம்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 12 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை வானில் 5 கோள்கள், 2 பெரிய விண்கற்கள் மற்றும் நிலா ஆகியவை ஒருசேர தெரியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பகுதியில் உள்ள மக்கள், கோள்கள் மற்றும் விண்கற்களின் அணிவகுப்பை காணலாம் எனவும் கூறியுள்ளனர்.
இவற்றில், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் தொலைதூரத்தில் இருக்கும் என்பதால், பார்க்க மங்கலாக இருக்கும். அவற்றை காண தொலைநோக்கியை உபயோகம் செய்யலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.