ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி நாடுகடத்தல்?. போர் சூழலில் காதல் ஜோடியை சேர்த்து வைக்க 63 ஆயிரம் பேர் பகீர் மனு..!
ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி நாடுகடத்தல்?. போர் சூழலில் காதல் ஜோடியை சேர்த்து வைக்க 63 ஆயிரம் பேர் பகீர் மனு..!
விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினாவை, புதினுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 69 வயது ஆகும் நிலையில், அவருக்கு ரகசிய காதலி இருப்பதாக கூறப்படுகிறது. ரஷியாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அலினா கபேவா (வயது 38) புதினின் ரகசிய காதலி என்று அறியப்படுகிறார்.
இவர்களின் இருவரின் காதலுக்கு அடையாளமாக குழந்தை ஒன்றும் பிறந்துள்ள நிலையில், அலினா மற்றும் அவரின் குழந்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கையில் இருக்கிறார்கள். தற்போது, உக்ரைனின் மீது ரஷியா போர் தொடுத்து சென்றுள்ள நிலையில், அவர் இம்மாத தொடக்கத்திலேயே பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விளாடிமிர் புதினின் எதிர்ப்பாளர்கள், அவரின் ரகசிய காதலியை நாடுகடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், "உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்றபோதிலும், விளாடிமிர் புதினின் ரகசிய காதலியை சுவிட்சர்லாந்து அரசு பாதுகாக்கிறது.
வரலாற்றில் மறக்க முடியாத ஹிட்லர் - அவரின் காதலி ஈவாவை போல, புதினையும் - அவரின் காதலி அலினாவையும் ஒன்று சேர்க்க வேண்டிய தருணம் இது. அவர்கள் இருவரையும் ஒன்றுசேர்த்து வைக்க வேண்டும்" என்று தெரிவித்து, 63 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.
உக்ரைன் - ரஷியா போரை தொடர்ந்து ரஷியாவின் மீது, அந்நாட்டின் அதிபர் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடை விதித்து இருந்தாலும், புதினின் காதலியின் மீது எவ்வித தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.