#CCTVFootage: பிரேக் அடிச்சும் நிக்கல., நிக்கல..! எமனான டெஸ்லா ஆட்டோமேட்டிக் கார் பயங்கர சம்பவம்.. டாப் ஸ்பீடில் சென்று 2 பேர் பலி..!
பிரேக் அடிச்சும் நிக்கல., நிக்கல..! எமனான டெஸ்லா ஆட்டோமேட்டிக் கார் பயங்கர சம்பவம்.. டாப் ஸ்பீடில் சென்று 2 பேர் பலி..!
தொழில்நுட்ப யுகம் நம்மிடம் அறிமுகம் ஆனதில் இருந்து, நம்மிடையே பல சிக்கலும் நிறைந்துவிட்டன. இன்றைய நாட்களில் மக்களின் விரும்பத்தக்க இடத்தில் இருப்பது Automatic எனப்படும் தானியங்கு செயல்முறை தான். கார்களில் இருந்து இருசக்கர வாகனம், பிற பொருட்களின் இயக்கம் போன்று ஒவ்வொரு விஷயத்திலும் தானியங்கு செயல்முறையை நாம் விரும்ப தொடங்கிவிட்டோம்.
மக்களின் தேவையை அறிந்துகொள்ளும் நிறுவனங்களும் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இயந்திரங்களை தயாரித்து வருகிறது. இவ்வாறான தானியங்கு பொருட்கள் அனைத்தும் நமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், சில நேரங்களில் அவை தனது செயல்பாடுகளின் விபரீதத்தை அடைகிறது.
அதனால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினால் நடக்கும் பின்விளைவுகள் அத்தாக்கம் நடந்த பின்னரே அதனை உறுதி செய்கிறது. இவ்வாறாக சீனாவை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜான் என்பவர், தனது டெஸ்லா Y ரக காரினை Parking Mode அமைப்பை பயன்படுத்தி நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், அது பலனற்று போயுள்ளது.
வாகன நிறுத்துமிடத்தில் கார் நிற்காமல் தானாக செயல்பட்டு அங்கிருந்து அதிவேகத்தில் பயணம் செய்ய தொடங்கியுள்ளது. ஓட்டுநர் அதனை நிறுத்த பிரேக் அழுத்தியும் பலனில்லை. அசுர வேகத்தில் புறப்பட்ட கார் முழு வேகத்தில் அங்குள்ள சாலைகளில் ஓடியது. இடையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை இடித்து தள்ளி சென்றதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும், காரில் இடித்து டெஸ்லா கார் நிலைதடுமாறி பின்னரே சாலையோரத்தில் உள்ள கடையில் புகுந்து நின்றது. டெஸ்லா கார் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விபத்து குறித்து சீன காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.