இளைஞரின் மூக்கை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 20 ஆண்டுகளாக இருந்த மர்மம்!
Teeth inside in human nose last 20 years
சீன நாட்டில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சு விடுவதத்தில் சிரமம் ஏற்பட்டதோடு அவரால் எந்த வாசனையையும் உணர முடியவில்லை. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவைரமானதை அடுத்து மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளார் அந்த வாலிபர்.
குறிப்பிட்ட வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது மூக்கு பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு கூறியுள்னனர். எக்ஸ்ரே எடுத்தபிறகு அதனை பார்த்த மருத்வவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் மூக்கின் உள்ளே மனிதனின் பல் போன்ற ஓன்று இருந்துள்ளது.
இதனை அடுத்து அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்த இளைஞர்கள் அவரின் மூக்கில் இருந்து சந்தேகப்பட மாதிரி பல் ஒன்றினை அகற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த இளைஞரிடம் விசாரித்ததில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அவர் சிறுவனாக இருந்தபோது விளையாடிக்கொண்டிருக்கையில் கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவரது இரண்டு பற்கள் காணாமல் போய்யுள்ளது. அதில் ஒரு பல்லை பெற்றோர் கண்டுபிடித்துவிட நிலையில் மற்றொரு பல் காணாமல் போனதை நினைத்து அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த ஒரு பல்தான் இளைஞரின் மூக்கிற்குள் சென்று கடந்த 20 வருடமாக உள்ளே இருந்து அவருக்கு சொந்தரவு கொடுத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்னனர்.